ஊட்டி சுற்றுலா இடங்கள் அல்லது உதகமண்டலம் : Ooty in Tamil

ஊட்டி மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது.  இது  நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஊட்டியில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் குன்னூர்  மற்றும் 31 கிலோமீட்டர் தொலைவில் கோத்தகிரி உள்ளது. இந்த மூன்று இடங்களுமே மலைவாசஸ்தலங்கள் ஆகும்.  கோவையில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.  ஏரிகள்,  அடர்ந்த காடுகள்,  பசும் புல்வெளிகள்,  வித்தியாசமான தாவரங்கள்,  தூய்மையான காற்று என்று மக்களை கவர்ந்திழுக்க கூடிய ஏராளமான சிறப்பம்சங்கள் இருக்கின்றன.  மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரயிலில் ஊட்டிக்கு செல்வது இன்னும் சுவாரசியமான அனுபவமாக இருக்கும்.  தாவரவியல் பூங்கா,  ஏரியில் படகு சவாரி,   பல வண்ண நிறங்களில் ஏராளமான ரோஜாக்கள் அணிவகுத்து இருக்கும் பூங்கா, அருங்காட்சியகம் போன்றவை ஊட்டியில் பார்க்க வேண்டிய இடங்கள்.

நீல நிற புகை போன்ற படலம் எப்பொழுதும் சூழ அமைந்துள்ளதால் நீலகிரி என்று அழைக்கப்படுகிறது.  பரப்பளவு 2549 ச.கி.மீ,  தலைமையிடம் உதகமண்டலம் (ஊட்டி)  கடல் மட்டத்திலிருந்து 2240 மீட்டர் உயரம் உள்ளது.  ஆண்டிற்கு 121 சென்டிமீட்டர் மழை பெய்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் பகுதியில் நீலகிரி மாவட்டம் உள்ளது.

உதகமண்டலம் வந்தடைய தமிழ்நாடு கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில்  முக்கிய நகரங்களில் இருந்து பேருந்து வசதி உண்டு. அருகில் உள்ள விமான தளம் கோவை மாவட்டம்.   கோவை - மேட்டுப்பாளையத்தை அடுத்து மலையில் ஊட்டி வரை குறுகிய இரயில் தடம் உண்டு.  ஏப்ரல் மே ஜூன் மாதங்கள் உதகமண்டலம் காண்பதற்கு நல்ல பருவநிலை ஆகும்.

Ooty Tourist Places in Tamil

ஊட்டி ஏரி Ooty Lake in Tamil

ஊட்டி ஏரி 1842 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட செயற்கை ஏரி ஆகும். இந்த ஏரியை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நிர்வகிக்கிறது. 

அரசு தாவரவியல் பூங்கா  அல்லது பொட்டானிக்கல் கார்டன்

அரசு தாவரவியல் தோட்டமான இதை,  இப்பூங்கா 1847 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.  இப்பூங்காவில் பல நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட மரங்கள் மற்றும் தாவரங்கள் அழகு செய்கின்றன.  2 கோடி வருடங்களுக்கு முந்திய கல்மரம் இங்கு உள்ளது. திரு. எம். சி. ஐஓர்  என்ற ஆங்கிலேயர் வடிவமைத்தார். இதன் பரப்பளவு 22 ஹெக்டேர்.  இது கடல் மட்டத்திலிருந்து 2400-2500  அடி உயரத்தில் மலைச்சரிவை ஒட்டி இத்தோட்டம் அமைந்துள்ளது. ஏராளமான மலர் செடி வகைகள்,  அபூர்வ தாவரங்களும்,  மூலிகை செடிகளும் இங்கு உள்ளன.

இங்கு ஆண்டுதோறும் மே மாதத்தில் நடைபெறும் மலர் கண்காட்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது.

தொட்டபெட்டா

புகழ் பெற்ற இந்த மலை உச்சி,  மேற்கு நிலப்பகுதியின் நடுவில் வடக்கு தெற்காக ஓடி தொட்டபெட்டாவில் அதிகபட்ச உயரத்தை எட்டுகிறது. தொட்டபெட்டா ஊட்டியிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில்,  கிழக்கு தென் கிழக்காக அமைந்துள்ளது.  நீலகிரி மாவட்டத்திலேயே அதிக உயரமான சிகரம் தொட்டபெட்டா தான்.  இதன் உயரம் 2636 மீட்டர்.  இதற்கு அடுத்துள்ள உயரங்கள் முறையே ஸ்நோ  டவுன்ஹில் 2530 மீட்டர். உயரம். தொட்டவுடன்,  அனைத்தும் சேர்ந்து உதகமண்டலம் என்ற அற்புதமான பள்ளத்தாக்கு உருவாகிறது.

பைகாரா

மாவட்டத்தில் பெரிய  ஆறு பைக்காரா, தோடர் பழங்குடியினர் இந்த ஆற்றை புனித நதியாக கருதுகின்றார்கள். முக்குர்த்தி உச்சியிலிருந்து இந்த ஆறு புறப்படுகிறது. பின்னர் பல குன்றுகள் வழியே பயணம் செய்து வடக்குப் பக்கமாக பொதுவாக ஓடி, பின்னர் பிராந்தியத்தின் முனையைத் தொடும்இடத்தில் மேற்காகத் திரும்புகிறது.  இந்த ஓட்டத்தில் பல இடங்களில் அருவியாகக் கொட்டி கீழ் நோக்கி இறங்குகிறது.  இதன் கடைசி இரண்டு கருவிகள் முறையே 55 மீட்டர் மற்றும் 61 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்து பைக்காரா அருவிகள் என்று அழைக்கப்படுகின்றன.  இந்த அருவிகள் ஊட்டியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பைகாரா அணைக்கட்டின் ஒரு அற்புதமான போட்  ஹவுஸ்சை பராமரித்து வருகிறது.

அவிலஞ்சி 

இந்த இடம் ஊட்டியில்  இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எமரால்டு பாரஸ்ட் வழியாக மேல் பவானி செல்லும் வழியில் உள்ளது.  இந்த இடத்துக்கு செல்லும் ஒவ்வொரு  திருப்பத்தில் இருந்து பார்த்தால் அற்புதமான,அழகிய வனக்காட்சிகள் தெரியும். அவிலஞ்சி குன்றின் மீதிருந்து பார்க்கும்போது அங்கு ஓடும் ஆறுகளும்,  பள்ளத்தாக்குகளும். நீர்த்தேக்கமும் கண்கொள்ளாக்  ஆக இருக்கின்றன.

 சில்ட்ரன்ஸ் பார்க்

 சில்ட்ரன்ஸ் பார்க்  ஏரியின் கிழக்கு பக்கம் முடிவில் உள்ளது. இங்கு உள்ள புல்வெளியில் இங்கு பூத்திருக்கும் பூக்களும் எந்தக் குழந்தையின் மனதில் மகிழ்ச்சியை பேரானந்தத்தையும் ஏற்படுத்தும் அவர்களை அறியாமலேயே விளையாட ஓடுவார்கள். இங்கிருந்து பார்த்தால் செயின்ட் தாமஸ் சர்ச்,  நிலையத்திலிருந்து ஊர்ந்து செல்லும் மலை ரயில்,  படகு சவாரி, குதிரை  சவாரி  என்று பார்க்க பார்க்க மகிழ்ச்சி பூத்துக்குலுங்கும் குழந்தைகளுக்கு ஏன் பெரியவர்களுக்கும் இவ்விடம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் இடம் ஆகும்.

லேடி கானிங் சீட்

லேம்ப்ஸ் ராக்கில் இருந்து மேலும் இரண்டு கிலோமீட்டர் சென்றால் இந்த இடத்தை அடையலாம்.  இந்த இடத்திற்கு இப்பெயர் வர வரலாற்று முறையான காரணம் ஒன்று உண்டு.  நமது முதல் சுதந்திரப் போராட்டம் 1857ஆம் ஆண்டு எழுச்சி பெற்றது.  அப்போது இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த கானிங் பிரபு இப் போராட்டத்தை நசுக்க படாத பாடு பட்டுக் கொண்டிருந்தார்.  ஆனால் அவருடைய மனைவியான லேடி கானிங் அம்மையாரோ இப்பகுதியில் தங்கியிருந்து ஓவியம்,  குதிரைச் சவாரி,  செடி வளர்த்தல் என்று உல்லாசமாக பொழுது  போக்கி கொண்டிருந்தார். இருபக்க  தோள்களை போல் குன்றுகள் எழ, மனதை கொள்ளை இடும் இந்த இடத்தை பழங்குடிகள் 'பட்டாம்பூச்சி நாடு'  என்று அற்புதமாக இதற்கு முன்னால் பெயரிட்டிருந்தனர்.

ஊட்டி ஆர்வமுள்ள இடங்கள் Ooty important Places in Tamil

 முக்கூர்த்தி  நேஷனல் பார்க்

நீலகிரி மலையின் உயரத்தில் அமைந்துள்ள இந்த பூங்கா நீலகிரி பையோ-ஸ்பியரின்ஒரு பகுதியாகும். ஊட்டியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இந்த தேசிய பூங்கா உள்ளது.  பர்சன்வேலி,  போர்புமண்ட், பைக்காரா போன்ற பகுதிகளிலிருந்து வண்டிப் பாதைகள் இப்பகுதிக்கு உண்டு.  இங்குள்ள ஆறுகளிலும்,  முக்கூர்த்தி ஏரியில் மீன் பிடித்து மகிழலாம். 

கெய்ரன் ஹில்ஸ்

அவிலஞ்சி குன்றுக்குச்  செல்லும் சாலையில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது.  இங்கு அற்புதமான சைப்ரஸ் மரங்கள்அவர் அமைக்க நீண்ட இயற்கையான நடைபாதை அமைந்துள்ளது.  இது மிகவும் மகிழ்ச்சிஅளிக்கக் கூடியது.

 கிளன்மோர்கன்

ஊட்டியில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள புவி இயல்சீர்மை பெற்ற இடம் இது. இங்கிருந்து சிங்கரா மின் நிலைய பணியாளர்கள் மூலமாக சிங்கரா மின் நிலையத்திற்கு செல்கிறார்கள்.  இதற்கான தூரம் நாலு கிலோமீட்டர் மிஞ்சிப்போனால் அழகான சோலைகளையும் சில சமயம் காட்டு மிருகங்களையும் பார்க்கலாம்.  ஆனால் மின்வாரியத்திடம் முன் அனுமதி பெற்றால் தான் பயணம் செய்ய முடியும்.

குதிரை பந்தய மைதானம்

ஊட்டி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது குதிரைப்பந்தய மைதானம்.  இந்தியாவின் பிரபலமான குதிரை பந்தய மைதானங்களில் ஒன்று  என்ற பெருமையுடைய இதன் ஓடுதள நீளம் 24 கிலோ மீட்டர்.  ஏப்ரல் மே ஜூன் மாதங்களில் மிக பிரபலமாக இருக்கும்.

 கல்கட்டி அருவி

ஊட்டி-மைசூர்  சாலையில்,  ஊட்டியில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் கல்கட்டி மலைத்தொடரில் உள்ளது  இந்த அருவி செப்டம்பர் நவம்பர் மாதங்களில் இந்த அருவிக்கு சென்றாள் சிறப்பாக இருக்கும். இது நாற்பது மீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது.

  கெட்டி வேலி வியூ

குன்னூர் சாலையில் அமைந்துள்ள இந்த பசுமை பள்ளத்தாக்கு உலகின் இரண்டாவது பெரிய பள்ளத்தாக்கு என்ற புகழ்பெற்றது. அழகிய  சிறுமலை கிராமங்கள் வரிசைத் தொடராக, கோவை மற்றும் மைசூர் மேட்டு சமவெளி வரை நீள்கிறது.

லேக்  ஹவுஸ்

புகழ் பெற்ற ஊட்டியில் உள்ள ஏரி. ஊட்டியின் முதல் ஆணையரான திரு ஜான்  சல்லிவன் அவர்கள்  1823-1825ல் இந்த ஏரியை உருவாக்கினார்.  இந்த ஏரியில் பெடல் படகுகள் ரோ படகுகள், அக்வா பைக்குகள் போன்ற வற்றை ஓட்டி மகிழலாம். மேலும்  இங்கு மினிர யில்கள்  டான்சிஸ் கார்கள் போன்ற கவர்ச்சி வாகனங்களும் உபரி மகிழ்ச்சியைத் தரும். தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் இந்தப் படகு குளம் நிர்வகிக்கப்படுகிறது.

வெஸ்ட்டன் கட்ச்மென்ட்

பார்சன் பள்ளத்தாக்கில் இருந்து 20 கிலோமீட்டர்.  இதுவும் மிகவும் ரம்மியமான ஒரு இடம்.  இங்க பச்சைப் பசும் புல்வெளிகளும் சோலைகளும் உள்ளன.

ஊட்டி சுற்றுலா தலங்கள் Places to visit in Ooty in Tamil

டைகர் ஹில்

தொட்டபெட்டா சிகரத்தின் கீழ்ப்பகுதியில்,  ஊட்டி நகருக்கு கிழக்கே உள்ள இடம் டைகர் ஹில் என்று அழைக்கப்படுகிறது.  இங்கு மூன்று கிலோமீட்டர் நீளத்திற்கு குடிநீர்த் தேக்கம்  உள்ளதுடன் ஆன்மீக பெரியாருடன் சம்பந்தப்பட்ட குகை ஒன்றும் மூடிய நிலையில் உள்ளது.

  லேக் பார்க் ஜாலி உலகம்

  லேக் போட்டோஸ் வளாகத்தில் உள்ளது.

அப்பர் பவானி

ஊட்டியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மேல் பவானி.  அதேபோல கோர குண்டாவில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிலும், அவலாஞ்சியில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. மிகவும் ரம்மியமான இடம் இது.  இயற்கை வளமிக்க இந்த இடத்தில் காட்டு  உயிர்கள் எவ்விதத் தொல்லையும் இல்லாமல் வாழ்கின்றன.  பங்கீதபள்ளியிலிருந்து சிஸ்பரா வழியாக மௌன பள்ளத்தாக்கை அடையலாம்.

வென்லாக் டவுன்ஸ்

இந்தப் பரந்த சமவெளியில் ஜிம்கானா கிளப்,  செம்மறி ஆட்டு பண்ணை மற்றும் பசும் புல்வெளி,  எப்போதும் குளிர்ச்சியை தக்க வைத்திருக்கும் சோலைகள் என்று இந்த பகுதி முழுவதுமே அழகுடன் காட்சியளிக்கும்.

குன்னூர் சுற்றுலா இடங்கள

பகாசுரன் ஹில்

குன்னூரில் இருந்து 13 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்தக் குன்றை துருக்குன்று என்றும் அழைப்பார்கள்.  மாவீரன் திப்பு சுல்தான் கட்டிய கோட்டை இங்குள்ளது. 

ட்ருக்

குன்னூரில் இருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது,  இங்கு பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிதிலமடைந்த கோட்டை ஒன்று உள்ளது. இதற்கு பகாசுரன் கோட்டை என்று பெயர். திப்பு சுல்தான் தனது புறக்காவல் கோட்டையாக பயன்படுத்தியுள்ளான்.

லாஸ் அருவி

குன்னூரில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இயற்கைபாறைகளின் சொர்க்கம் இது.  இந்த அருவி பாறைகள் நிறைய உள்ளது மட்டுமல்ல மூர்க்கமானது கூட குளிக்கச் செல்ல கூடாது.

காட்டேரி அருவி

குன்னூர் பஸ் நிலையத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் ' குண்டா'  சாலையில் இது அமைந்துள்ளது.  நீலகிரி மலையின் மூன்றாவது பெரிய அருவியான இதன் உயரம் 60 மீட்டர்.

லாஸ் ராக்

பஸ் நிலையத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வனகாப்பிடத்திற்குள் அமைந்துள்ளது.  இங்கிருந்து பார்த்தால் புலியார், கல்லார்  ஆகிய நீர்த்தேக்கங்களின் வனப்பு மிகு சுற்றுப்புறங்களை பார்த்து மகிழலாம்.

 சீம்ஸ் பார்க்

கோத்தகிரி சாலையில் மேல் குன்னூரில் இந்த புகழ்பெற்ற பூங்கா அமைந்துள்ளது.  இங்கு முறைப்படுத்தப்பட்ட புல் பாதைகள்,  அலங்கார மலர் படுகைகள், பல்வேறு செடி,  மூலிகை வகைகள்,  அரிதான மரங்கள் என்று பார்க்க ஏராளமாக உள்ளன.  ஒவ்வொரு மே மாதமும் காய்கறி கண்காட்சி இங்கு நடக்கின்றன.

வெலிங்டன் ஸ்டாக் காலேஜ் 

ஊட்டியிலிருந்து குன்னூர் செல்லும் வழியில் உள்ளது வெலிங்டன்.  வரிசை வரிசையாக இராணுவக் குடியிருப்புகள் உடன் கூடிய ஒரு ராணுவ நகரம் இது.  இந்திய ராணுவத்தின் சென்னை பிரிவு மையத்தின் தலைமை அலுவலகம் மற்றும் இராணுவ பணியாளர் கல்லூரியும் இங்குதான் உள்ளன.